பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

  அனிதா   | Last Modified : 08 May, 2019 09:50 am
plus-1-exam-results-output

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 95 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பிளஸ்1 பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியானது. இதில் 95 சதவீதம்  மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.7சதவீதம் அதிகம்.

இந்த ஆண்டு 96.5 சதவீதம் மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்தம் 2634 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேப்போல் பிளஸ் 1 தேர்வெழுதிய 2, 896 மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளில் 2,721 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்வெழுதிய 78 சிறை கைதிகளில் 62 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடத்தையும், திருப்பூர் இரண்டாம் இடத்தையும், கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close