திமுகவுடன் கூட்டணி என்று கூறினேனா? - கொந்தளித்த தங்கத்தமிழ்ச்செல்வன்!

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 12:34 pm
thangatamilselvan-press-meet

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று கூறினேனே தவிர திமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுகவின் கொள்கை பறப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், "திமுகவுடன் கூட்டணி சேர்வோம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. திமுக உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று தான் கூறினோம். ஏனென்றால் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி நடக்கவில்லை.  ஊழல் ஆட்சி தான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த துரோக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். எனவே, அமமுக இந்த ஆட்சியை கலைக்கும். 

ஆளும் அதிமுக கட்சி மீது மக்கள் வெறுத்து போயுள்ளனர். 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றபிறகு, அக்கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை  இழக்கும். அதன்பின்னர் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பில் அமமுக அதிமுகக்கு எதிராக வாக்களிக்கும்.  திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுகவுக்கு எதிராகத் தானே வாக்களிக்கும். 

அதிமுக ஆட்சியை கலைக்க அனைவரும் ஒருமித்த பாதையில் பயணிப்போம் என்று தான் கூறினோமே தவிர, கூட்டணி சேருவோம் என்று சொல்லவில்லை" என்று கூறினார்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close