வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்: தேர்தல் ஆணையத்திடம் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மனு!

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 02:04 pm
rs-bharathi-evks-elangovan-meets-election-officers

கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மறுவாக்குப்பதிவு கோரப்பட்ட தர்மபுரி உள்ளிட்ட 10 தொகுதிகள் குறித்து எந்த பதிலும் அளிக்காத தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவே கோராத மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவது ஏன்?

மேலும், தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியது அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காகவா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்காக தான் ஓபிஎஸ், வாரணாசியில் மோடியை சந்தித்தாரா?

இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியின்  விளக்கம் திருப்தி அளிக்காததால் தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

அதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேனி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது. அங்குள்ள மக்கள் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்கவில்லை. 

ஓபிஎஸ் மகனை வெற்றி பெறச் செய்யத் தான் கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close