இவிஎம் இயந்திரங்கள் தேனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? : அதிகாரி விளக்கம்

  அனிதா   | Last Modified : 08 May, 2019 06:48 pm
if-re-election-on-46-polling-center-in-tamil-nadu

மறுவாக்குப் பதிவு நடைபெற்றால் அதற்கு தயாராகும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, தேனி மற்றும் ஈரோட்டுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வாக்குகளை தேர்தல் துவங்குவதற்குமுன் நீக்கிவிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில தேர்தல் அதிகாரிகள் இதை செய்யத்தவறியதால் தவறுகள் நடந்துள்ளன. தமிழகத்தில் 46 இடங்களில் இதுபோல தவறுகள் நடந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அளித்துள்ளோம்.

ஆனால், தவறு நடந்துள்ள 46 வாக்குச்சாவடிகள் அடங்கிய 13 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடக்குமா என்பது குறித்து தற்போது  கூறமுடியாது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையமே பரிசீலித்து, மறுவாக்குப்பதிவு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கும்.

அவ்வாறு மறுவாக்குப்பதிவு நடந்தால் அதற்கு தயாராகும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தேனிக்கு 50 EVM இயந்திரங்களும், ஈரோடுக்கு 20 VVPAT இயந்திரங்களும் இடம் மாற்றப்பட்டுள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்ட வழக்கமான செயல்தான் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close