எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா?

  அனிதா   | Last Modified : 08 May, 2019 03:24 pm
in-some-places-the-possibility-of-heavy-rain

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 9 செ.மீ., மணப்பூண்டி 7 செ.மீ., மதுரை, கரூரில் தலா 6 செ.மீ., காஞ்சிபுரம் 5 செ.மீ., தருமபுரியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது அதிகபட்சமாக 40 டிகிரியும், குறைந்தபட்சமாக  31 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close