அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? : துறைச் செயலர் விளக்கம்

  அனிதா   | Last Modified : 08 May, 2019 03:33 pm
3-people-died-of-a-heart-attack-health-secretary

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மூவர் இறந்ததற்கு, அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதே காரணம் என்று சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் தடைப்பட்டு 3 பேர் உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால், இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 3 பேரும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். 

மேலும், ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள், மின்தடையால் செயற்கை சுவாசம் தடைப்பட்டு இறக்கவில்லை என்றும், மின்தடைக்கு முன்னதாகவே 3 பேரும் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close