மாற்றுத்திறனாளியை அலைக்கழித்த உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 05:53 pm
sp-suspended-by-commissioner

அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்த மாற்றுத்திறனாளியின் புகாரை ஏற்காமல், அவரை அலைக்கழித்த போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, அரசுப் பேருந்து ஒன்று மோதியதில் மாற்றுத்திறனாளி அந்தோணி என்பவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக அவர் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அவரது புகாரை ஏற்காமல் உதவி ஆய்வாளர் மோகன் அவரை அலைக்கழித்துள்ளார். பின்னர் இது ஊடகத்தின் கவனத்திற்கு வரவே, அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் மோகனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அந்தோணி மீது பஸ் மோதியது தொடர்பான புகாரில், 40 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, எஸ்.பி. மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close