தங்க தமிழ்செல்வன் விரைவில் திமுகவில் இணைவார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

  அனிதா   | Last Modified : 09 May, 2019 08:46 am
thangatamilselvan-will-soon-join-the-dmk-minister-sellur-raju

அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் மிக விரைவில் திமுகவில் இணையபோகிறார் என்றும், அதற்காகத்தான் அவர் திமுக ஆதரவு தர வேண்டும் என பேசிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பல்வேறு இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளனர். இளைஞர்கள் வருவதை அதிமுக வரவேற்கிறது. திமுகவில் வாரிசுகளுக்குத்தான் பதவி கொடுக்கப்படும். நாடாளுமன்றத் தொகுதியில் 20 தொகுதியில் 10 தொகுதிகள் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த கட்சியில் எதிர்காலம் இருக்காது என்று நினைத்த இளைஞர்கள் அதிமுகவுடன் இணைத்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் சிறப்பான வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்று ஏதுமில்லை. தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக இன்று தோழமை கட்சிகளோடு இணைந்து செயல்படுவதின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.

எதிர்க்கட்சிகளுக்கு வாக்குகள் செலுத்துவதினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை தொகுதிக்கு வளர்ச்சி கிடைக்காது. எனவே ஆளுங்கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என ஒரு சாரார் இருக்கின்றனர். அதிமுக அரசு மக்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் செய்தது கிடையாது. எங்கள் கட்சி ஆட்சியில் மின்தடை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவை கிடையாது.  நல்ல திட்டங்கள் கிடைக்கிறது எனவே இதையெல்லாம் பார்க்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்கின்றனர்.

மு.க. ஸ்டாலின் உழைப்பின் மூலமாக உயர வில்லை. வாரிசு அடிப்படையில் தான் பதவிக்கு வந்துள்ளார். மக்களுடைய நம்பிக்கை ஸ்டாலின் பெற வேண்டும் என்பதற்கு குறுக்கு வழியில் செல்கிறார். தற்போது டிடிவி.தினகரனை பயன்படுத்தி அவருடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று, இரண்டு பேரை தூண்டி இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைக்கிறார். அவருடைய கனவு நிச்சயம் நிறைவேறாது.

தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி.தினகரன் பக்கத்திலிருந்து அவரை எதிர்த்து பேசிக் கொண்டு இருக்கிறார். தினகரனின் வளர்ச்சிக்கோ தினகரனின் ஆதரவுக்கோ தங்க தமிழ்ச்செல்வன் எதுவும் கூறவில்லை. அவருடைய கருத்துக்கள் அனைத்தும் திமுகவிற்கு செல்ல போவதற்காக சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக திமுகவிற்கு தங்கதமிழ்செல்வன் செல்லப்போகிறார். அவருடைய பேட்டிகள் அனைத்தும் பார்க்கும்போது அப்படிதான் இருக்கிறது என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close