சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் ப.சிதம்பரம்!

  முத்துமாரி   | Last Modified : 09 May, 2019 11:51 am
p-chidambaram-election-rally-in-sulur-and-aravakurichi

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்யவுள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வருகிற மே19ம் தேதி நடக்க இருக்கிறது.

இதையொட்டி, 4 தொகுதிகளிலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அப்பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். 

இதைத்தொடர்ந்து, மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் இன்றும், நாளையும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இன்று மாலை 6 மணிக்கு சூலூர் தொகுதியிலும், நாளை மாலை 6 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்று பேசுகிறார். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தலைவர்கள், திமுக தொண்டர்கள் இதில் பங்கேற்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close