மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

  முத்துமாரி   | Last Modified : 09 May, 2019 03:37 pm
madurai-court-orders-tn-to-submit-report-for-madurai-hospital-issue

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், அதுகுறித்த அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ராஜாஜி நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் தடைப்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால்,  மின்தடை ஏற்படுவதற்கு முன்னதாக அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

அதேபோன்று, மாரடைப்பு காரணமாகவே இவர்கள் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ப்யூலா ராஜேஷ் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், அதுகுறித்த நிலை அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close