மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ

  அனிதா   | Last Modified : 09 May, 2019 04:16 pm
campaign-is-not-permitted-in-the-re-voting-venues

மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள 13 இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் மீண்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் மொத்தம் 46 இடங்களில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என கோரிய நிலையில், 13 இடங்களில் வரும் 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு மறு வாக்கு பதிவு நடைபெறாது. 

மறுத்தேர்தல் நடத்த தேவையான வாக்குபதிவு இயந்திரம் (Electronic Voting Machines) மற்றும் விவி பேட் ( Voter-verified paper audit trail ) ஆகியவை உள்ளதா என பார்த்து வருகிறோம். கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றம் செய்யப்பட்ட போது தலைமை தேர்தல் ஆணையரிடம் முறையான அனுமதி பெறப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் முறையாக அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தகவல் தெரிவித்த பின்னர் தான் எடுத்து செல்லப்பட்டது. 

மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள இடங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சோதனை செய்த பின்னரே 19ஆம் தேதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு உள்ளது. நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

மறுவாக்கு பதிவு நடைபெறவுள்ள  ஈரோடு, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இடங்களில் எதனால் மறுவாக்கு பதிவு நடத்தப்படுகிறது என்பது குறித்து சத்யபிரதா சாஹு கூறியதாவது: 

ஈரோடு 

ஈரோடு மக்களவைத் தொகுதியில் காங்கேயம் பகுதியில் உள்ள எண் 248 வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்திய அதிகாரி மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து அழிக்கத் தவறிய காரணத்தால் அங்கு மறு வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேனி 

தேனி மக்களவைத் தொகுதியில் ஆண்டிப்பட்டி  வாக்குச்சாவடி எண் 67ல் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள்  மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடத்தியதால் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல தேனி மக்களவைத் தொகுதி பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் எண் 197ல் மாதிரி வாக்குப்பதிவிற்கு ஒரு  இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் என இரண்டு இயந்திரங்கள் வாக்கு பதிவிற்கு பயன்படுத்தியதால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி

தருமபுரி மக்களவைத் தொகுதி பாப்பிரெட்டி பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை.

கடலூர் 

கடலூர் மக்களவை தொகுதி திருவதிகை பகுதியில் வாக்குச்சாவடி எண் 210ல் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பட்டன்கள் சரியாக இயங்கவில்லை இதன் காரணமாக மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் 

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி, பூந்தமல்லி பகுதியில் மாதிரி வாக்குப்பதிவில் நடைபெற்ற வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடத்தியதன் காரணமாக மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மே மாதம் 23ம் தேதி வரை பெறப்படும் தபால் வாக்குகள், வாக்கு எண்ணிக்கையின் போது கணக்கில் எடுத்து கொள்ளப்படும். 13 இடங்களில் மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அந்த இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் மீண்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close