நீட் தேர்வு: தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது

  முத்து   | Last Modified : 09 May, 2019 05:36 pm
neet-exam-only-tamil-nadu-can-not-be-exempted

நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் பிரகாஷ்  ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி மத்திய அமைச்சர் பிரகாஷ்  ஜவடேகர் இன்று பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ‘ நீட் தேர்வில் ஒரு மாநிலத்துக்கும் மட்டும் விலக்கு என்பது அளிக்க முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. நீட் தேர்வினால் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் நிலை குறைந்துள்ளது’ என்றார்.

மேலும், தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும், பிற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டாக உள்ளதாகவும், டிஜிட்டல் முறை கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக சிறந்து விளங்குவதாகவும்  மத்திய அமைச்சர் பிரகாஷ்  ஜவடேகர் கூறியுள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close