திருச்சி: கேஸ் பைப்பில் கடத்தி வரப்பட்ட ரூ.18.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 11:18 am
gold-confiscated-in-trichy

திருச்சி விமான நிலையத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்புள்ள அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த மலிண்டோ விமானத்தில் பயணித்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது கேஸ் ஸ்டவுக்கு பயன்படுத்தும் கேஸ் பைப்பில் மறைத்து, நூதன முறையில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக திருவாடானையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம்  இருந்து 18.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர் அதிகாரிகள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close