எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்: சபாநாயகர் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

  முத்துமாரி   | Last Modified : 10 May, 2019 12:01 pm
sc-asks-explanation-for-speaker-s-notice-against-mlas

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அளித்துள்ள நோட்டீசுக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி, கலைச்செல்வன் மற்றும் ரத்தின சபாபதி ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து , எம்.எல்.ஏ பிரபுவும் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அளித்துள்ள நோட்டீசுக்கு தடை விதித்ததோடு, இது தொடர்பாக ஜூன் 12ம் தேதிக்குள் சபாநாயகர் விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close