காங்கிரஸுடன் இணைய த.மா.காவுக்கு அழைப்பு விடுத்த கே.எஸ்.அழகிரி!

  முத்துமாரி   | Last Modified : 10 May, 2019 12:54 pm
ks-alagiri-calls-tamil-maanila-congress-to-join-with-congress-party

காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி த.மா.காவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த ஜி.கே. மூப்பனார் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினாலும், காங்கிரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை. அவரது கனவில் கூட காங்கிரஸ் எதிர்ப்புணர்வு வந்தது கிடையாது. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி மீதும், நேரு தலைமை மீதும் அளவற்ற பற்றும், நம்பிக்கையும் கொண்டவர். 

ஆனால், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ், பாஜகவோடு இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவோடு இணைவது என்பது தற்கொலைக்கு சமம். 

எனவே, கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீண்டும் காங்கிரசில் இணைய வேண்டும். த.மா.காவினருக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close