கடையின் முன்பே புதிய போனை தீயிட்டு கொளுத்திய வாடிக்கையாளர்!

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 06:47 pm
a-man-burned-new-phone-infront-of-shop

சென்னையில், வேலை செய்யாத புதிய மொபைல் போனை மாற்றித்தர கடைக்காரர் மறுத்ததால், கோபத்தில் கடையின் முன்பே செல்போனை தீயிட்டு கொளுத்தியுள்ளார் ஒரு வாடிக்கையாளர். 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மொபைல் ஃபோன் கடையில், வாடிக்கையாளர் ஓருவர் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டுக்கு திரும்பிய அவர், அந்த போனை 'ஆன்' செய்துள்ளார். ஆனால், அது வேலை செய்யவில்லை. 

உடனே கடைக்கு மீண்டும் சென்று, விபரத்தை கூறி, வேறு மொபைல் போன் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் போனை மாற்றித்தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து,  கோபமடைந்த அந்த நபர், தான் வாங்கிய செல்போனை அந்தக்கடையின் முன்பாகவே போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close