சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அனல் காற்று வீசும்

  ராஜேஷ்.S   | Last Modified : 10 May, 2019 04:22 pm
chennai-tiruvallur-kanchipuram-thermal-wind-will-blow

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீசும் என்றும், வடக்கு உள் தமிழக மாவட்டத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீசும். வெப்பச்சலனம் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வடமேற்கு மாவட்டத்திலும், திருச்சி, தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்பட 15 மாவட்டத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close