முன்னாள் எம்.பி., கோவை ராமநாதன் காலமானார்! மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

  முத்துமாரி   | Last Modified : 10 May, 2019 03:25 pm
kovai-ramanathan-passed-away

திமுகவின் முன்னோடியும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான கோவை மு.இராமநாதன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

திமுகவின் மூத்த முன்னோடியான "கோவை தென்றல்" மு.இராமநாதனுக்கு, இராமகாந்தன் என்ற மனைவியும், பன்னீர்செல்வம், இளங்கோ, மு.ரா.செல்வராஜ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். 2 மகன்கள் இறந்து விட்டனர்.

மு.இராமநாதன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர், தற்போது வரை உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

1993ல் திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி இவருக்கு "அண்ணா விருது" வழங்கி கெளரவித்தார். 1970 முதல் 1976 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1984 -1989ல் சட்டமன்ற உறுப்பினராவும், 1996ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேலும், இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டப்பிரிவை எரித்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.  கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். 

இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எ.வா.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ராமநாதனின் மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடவும் திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close