வேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் வாய்ப்பில்லை

  முத்து   | Last Modified : 10 May, 2019 05:06 pm
re-election-of-vellore-constituency-no-chances

வேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் தற்போதைக்கு வர வாய்ப்பில்லை, அது தொடர்பான எந்த தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில், ‘13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தகவல் பறிமாறி வருகிறது.

வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு கூடுதலாக வழங்கப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கும் கூடுதலாக 3 கம்பெனி ராணுவத்தினரை கேட்டுள்ளோம்.

தேனி மற்றும் ஈரோடில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. மற்ற இடங்களில் VVPAT மூலம் வாக்கு எண்ணிக்கைதான் நடைபெறவுள்ளது.

வேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் தற்போதைக்கு வர வாய்ப்பில்லை, அது தொடர்பான எந்த தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை. இடைத்தேர்தல் போன்று அதை உடனடியாக நடத்த முடியாது’ என்றார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close