கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இன்று அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த விஜின், சாஜூ ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in