திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை: தங்க தமிழ்ச்செல்வன்

  முத்துமாரி   | Last Modified : 11 May, 2019 12:02 pm
thanga-tamil-selvan-press-meet

நடந்து முடிந்த 22 தொகுதியின் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஊழல் ஆட்சியை ஒழிக்க சட்டப்பேரவையில் முதல்வருக்கு எதிராக வாக்களிப்போம். அந்த நிலைமை மே 23க்கு பிறகு வரும். தினகரன் தலைமையிலான நல்லாட்சி அமைந்திட நாங்கள் செய்யும் முயற்சி விரைவில் வெற்றி பெறும். பதவியை பெரிதாக நினைத்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால், எங்களுக்கு திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் ஊழல் செய்யும் அதிமுக ஆட்சியை கலைப்பதே எங்களது முதல் நோக்கம்.

வாக்குஎண்ணிக்கையின் போது அதிமுக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஜெ ஆட்சியை கலைக்க பேரவையில்  திமுகவோடு ஆதரவு அளித்து கூட்டணி வைத்த ஓபிஎஸ் தான் அழியபோவது உறுதி. வரும்23ஆம் தேதி தோல்வியோடு, அதிமுக அமைச்சர்கள் காணாமல் போவார்கள். அவர்கள்பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சனை உருவாக்க முயல்வதால், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியை தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். 

தேனி தொகுதியில் மறுவாக்குபதிவுக்கு யாரும் கேட்கவில்லை. ஆனால் மறுவாக்குப் பதிவு நடக்கும்போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சனை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close