தமிழக உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 11 May, 2019 03:08 pm
moderate-rainfall-in-the-tamil-nadu-local-districts

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 4 சென்டி மீட்டரும், தேனி மாவட்டதில் 3 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்  பகுதியில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசுமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close