பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு, முட்டையுடன் பாலும் வழங்க அரசு ஆலோசனை!

  முத்துமாரி   | Last Modified : 11 May, 2019 03:34 pm
tn-govt-discussion-is-going-reg-milk-to-be-provided-to-students-with-meal

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவு, முட்டையுடன் பாலும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில், 1950 காலகட்டத்திலே பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், இது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது வழங்கிவரும் சத்துணவு, முட்டையுடன் கூடுதலாக பாலும்சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலில் கால்சியம் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளதால் அதனையும் சத்துணவுடன் சேர்த்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமென முன்னதாக, மத்திய விவசாயத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close