அன்னையர் தினம் : தலைவர்கள் வாழ்த்து!

  கிரிதரன்   | Last Modified : 12 May, 2019 09:28 am
mothers-day-leaders-wishes

 உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அன்னையர் தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஊனாகி உடலாகி உயிராகி, உலக உயிர்களுக்கெல்லாம் பிரதானமாய் திகழும் மாசற்ற தூய உள்ளம் தாய். ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடேதுமில்லை. தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாகியர் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

"நீரின்றி மட்டுமின்றி தாயின்றியும் அமையாது உலகு. பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் அன்னை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close