நடிகர்கள் ஒழுக்க சீலர்களாக திகழ வேண்டும்: எஸ்.வி.சேகர்

  அனிதா   | Last Modified : 12 May, 2019 12:48 pm
actors-should-be-a-model-of-discipline-s-v-shekar

நடிகர்கள் ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும், நடிகர் விஷால் தனது வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார் எனவும் நடிகர் எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர், திருச்சியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

தற்போதுள்ள நடிகர் சங்கம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறது. நவம்பர் மாதத்திற்கு பின் நடிகர் சங்கத்தில் நடப்பது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதாக தான் உள்ளது.

மேலும், நான் தவறு செய்தால் நேரடியாக மன்னிப்பு கேட்பேனே தவிர, என்னுடைய அட்மின் செய்தார் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நடிகர்கள் ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார் நடிகர் விஷால். அவருக்கு விண்ணப்பம்கூட எப்படி எழுதுவது என தெரியவில்லை. 

நடிகர் சங்கத்திற்கு ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, எஸ்.வி.சேகர் தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு அமைக்கப்படும் என எஸ்.வி.சேகர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனை காட்டிலும் கமல்ஹாசன் அதிக வாக்குகளைப் பெறுவார் என்றும், பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close