உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் -சென்னை வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 12 May, 2019 02:29 pm
chennai-weather-report

வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், "தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 7 செ.மீ மீட்டர் மழை பதிவாகி உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close