10 நாட்களுக்குள் ஆட்சி மாற்றம்: முதல்வருக்கு துரைமுருகன் சவால்!

  முத்துமாரி   | Last Modified : 12 May, 2019 05:47 pm
duraimurugan-at-aravakurichi

''தமிழகத்தில், 22 சட்டசபை  தொகுதி இடைத் தேர்தலில், திமுக வெற்றி பெற்றால் அடுத்த பத்து நாட்களுக்குள் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன்'' என, திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, இன்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்குள்ள பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது, "இந்த கூட்டத்தை பார்க்கும் போது மக்களுக்கு எடப்பாடி அரசு மீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று தெரிகிறது. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். கண்டிப்பாக தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும். ஆட்சி மாற்றம் ஏற்பட இந்த இடைத்தேர்தலில், 22 தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றாலே போதும். 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று விட்டால், அடுத்த பத்து நாட்களுக்குள் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன். இது முதல்வருக்கு நான் விடும் சவால். 

வேட்பாளர் செந்தில்பாலாஜியை பொறுத்தவரை அவர், அரசியலில் திறமைசாலி. இங்குள்ள சுமார் 25 ஆயிரம் மக்களுக்கு தலா 3 சென்ட் நிலம் தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் எதுவும் செய்யாத போது, சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு இதனை செய்வதாக செந்தில்பாலாஜி கூறினார். உண்மையில் இது வியப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நான் அரைசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் திமுகவுக்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.

அரவக்குறிச்சி மக்கள் அவரை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.அரவக்குறிச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மே 23-ஆம் தேதி மாற்றம் நிகழும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close