இன்று மாலை மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்!

  அனிதா   | Last Modified : 13 May, 2019 08:57 am
chandrasekara-rao-meets-mk-stalin-this-evening

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். 

மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களை  தவிர மற்ற மாநில தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், 3வது அணி தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ், இன்று மாலை 4 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் அவரை சந்திக்கவுள்ளார். அதை தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, மம்தா, மயாவதி, நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close