வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 13 May, 2019 01:45 pm
the-impact-of-heat-increases-weather-center

தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் நாளை முதல் அதன் தாக்கம் அதிகரித்து அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செ.மீ மழையும், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணியில் 3செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close