ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறையா?

  ராஜேஷ்.S   | Last Modified : 13 May, 2019 05:47 pm
petrol-bunk-leaves-on-sundays

ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை என சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சில தினங்களாக மே 14-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும், விடுமுறை என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரவி வந்தது.

இந்த நிலையில், இந்த வதந்தி தொடர்பாக பெட்ரோல் விற்பணையாளர் சங்கத் தலைவர் முரளி விளக்கமளித்துள்ளார். அதில், வாட்ஸ் அப் செய்தியில் உண்மையில்லை. அதுவெறும் வதந்தி. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close