ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக: மக்கள் நீதி மய்யம்

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 12:30 pm
mnm-condemned-for-rajendra-balaji-s-speech

ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். 

கமல் இவ்வாறு பேசியதற்கு,  பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்திய இறையாண்மையாக்கு எதிராக பேசிய கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கடும் வார்த்தைகள் கூறியிருந்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close