மநீம கட்சியை தடைசெய்யக் கோரி மனு!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 12:57 pm
petition-to-ban-the-mnm-party

இந்து, முஸ்லீம் மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் கடந்த 12ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில்,  சென்னை தலைமை செயலகத்தில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சை கண்டித்து புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹிந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளதாகவும் இது மிகவும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.

மேலும், மதக் கலவரங்களை தூண்டும் வகையில் தேர்தல் நடத்தை விதிக்கு எதிராக பேசியுள்ள கமல் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் அவரது கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், தலைமை தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close