மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 14 May, 2019 01:30 pm
heat-increases-for-the-next-three-days-weather-center

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரி முனை பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும்,  வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குடநாட்டில் 4செ.மீ மழையும், திண்டுக்கல் நத்தத்தில் 3 செ.மீ மழையும், கோவை பெரியநாயக்கன் பாளையம், ஈரோடு, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் 2செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், என்றும் அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் நிலை மாறியது. எனவே இன்று அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை, ஆனால் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப நிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசில் இருந்து குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close