பரபரப்பான அரசியல் சூழலில் சந்திரபாபு நாயுடு - துரைமுருகன் சந்திப்பு!

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 03:46 pm
chandrababu-naidu-duraimurugan-meet

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மனைவி மற்றும் மகன் கதிர் ஆனந்துடன் இன்று ஆந்திராவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கோவில் வழிப்பாட்டிற்காக சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்து பேசியுள்ளார். அமராவதி தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்கள் துரைமுருகனிடம் கேட்கும் போது, "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஆந்திராவுக்கு சென்றதால், தனிப்பட்ட முறையில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இது வழக்கமான ஒன்று தான். ஆந்திர முதல்வருடன் நெருங்கிய நட்பு உள்ளது. எனவே இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை" என்று கூறியுள்ளார். 

நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்தார். அப்போது துரைமுருகன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close