பள்ளி டி.சி.யில் சாதிப்பெயரைக் குறிப்பிட தேவையில்லை

  முத்து   | Last Modified : 14 May, 2019 04:42 pm
no-need-to-mention-the-community-name-in-tc

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக  பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், பள்ளிகளில் வழங்கும் மாற்றுச்சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மாற்றுச்சான்றிதழில் ‘வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை’ பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். சாதி தொடர்பான கேள்வியை  நிரப்ப வேண்டாம் என பெற்றோர் தெரிவித்தால் அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச்சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதில் குறிப்பிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close