கடைகளில் மீண்டும் பெப்சி, கோக் விற்பனைக்கு இல்லை!

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 05:04 pm
coke-pepsi-are-banned-from-aug-15

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்கள் கோக், பெப்சி உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்துக் கடைகளிலும் கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்படும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்த விதிமுறை வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு பதிலாக, பதநீர், இளநீர் மற்றும் உள்ளூர் குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படும்" என அறிவித்துள்ளார்.

இதற்கு சமூக நல ஆர்வலர்கள், இளைஞர்கள்,பொது மக்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, தமிழகத்திற்கு எதிராக செயல்பட்ட 'பீட்டா' அமைப்பினை கண்டித்து வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று கூறி, இளைஞர்கள் கோக், பெப்சியை புறக்கணித்தனர். 

இதனால் அந்த நிறுவனங்கள் தமிழகத்தில் சற்று சரிவை சந்தித்தன. பின்னர், மத்திய அரசிடம் பெப்சி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மீண்டும் பெப்சி, கோக் விற்பனை தமிழகத்தில் தலைதூக்க ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் தான் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close