சென்னையில் அதிர்ச்சி... நாயை தண்ணீரில் முக்கி கொன்ற கொடூரன்

  ராஜேஷ்.S   | Last Modified : 14 May, 2019 05:23 pm
the-cruelty-that-killed-the-dog-in-the-water

சென்னை வண்ணாரப்பேட்டையில் வாயில்லா பிராணியான நாயை ரோட்டில் தரதரவென இழுத்து சென்று தண்ணீரில் முக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடுரோட்டில் நாயை கட்டி தர தரவென இழுத்துச் சென்று மூலகொத்தளம் அருகே உள்ள கால்வாயில் முக்கி துடிக்க துடிக்க கொலை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வீடியோவை பார்த்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மகாதேவன் என்பவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீடியோவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முருகன் என்பவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close