ஏ.சி.யில் கேஸ் கசிந்து தீ விபத்து... கணவன், மனைவி, மகன் பலி...!

  டேவிட்   | Last Modified : 15 May, 2019 07:51 am
ac-fire-accident-3-dead-at-tindivanam

திண்டிவனம் காவேரிபாக்கத்தில் உள்ள வீட்டில் ஏசியில் ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர. 

திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் வசித்து வரும் ராஜி,  வெல்டிங் கடை வைத்திருந்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவர்களது வீட்டின் ஒரு படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.சி.யில் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ராஜி அவரது மனைவி லதா, மகன் கவுதம் ஆகியோர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மூவரும் தூங்கிக்கொண்டிருந்ததால், மயக்க நிலைஅடைந்து பின்னர் உடல்கருகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close