கமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது: அமைச்சர் செல்லூர் ராஜூ

  அனிதா   | Last Modified : 15 May, 2019 09:16 am
does-not-capable-political-for-kamal

கமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது எனவும், அவர் தன் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கே செல்லலாம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசனுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது. அவர் சினிமாவில் பட்டம் பெற்று இருக்கலாம். சினிமா துறையிலும் கலைத்துறையிலும் பல்வேறு விருதுகளை பெற்று இருக்கலாம்.

ஆனால் அரசியல் என்பது வேறு. அவருக்கு அரசியல் ஒத்துவராது. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர் பேசியது யாருக்கும் எதுவும் புரியவில்லை. இப்போது இந்துக்கள் குறித்து அவர் பேசிய கருத்திலிருந்து அரசியலில் மிகப் பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். என்னை பொறுத்தவரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரே சரியில்லை. கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு மீண்டும் கலைத்துறைக்கு செல்லலாம். 

மு.க.ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நிலையான கருத்து கிடையாது. உண்மையான காங்கிரஸ் தியாகிகள் யாரும் திமுகவிற்கும் ஓட்டு போட மாட்டார்கள். பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூட பாஜக தலைவர்களுடனும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக கூறுகிறார்.

அரசியல் பதவிக்கு தகுதி இல்லாத தலைவராக இருக்கிறார் ஸ்டாலின். அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை அண்ணா வழியிலும் ஜெயலலிதா வழியிலும் எம்ஜிஆர் வழியிலும் நடக்கக் கூடிய கட்சி" என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close