சிலிண்டரை டெலிவரி செய்யும் முன்பே ஆட்டைய போடும் ஊழியர்கள்... அதிர்ச்சி வீடியோ...!

  அனிதா   | Last Modified : 15 May, 2019 11:27 am
gas-theft-by-staff-before-delivery-of-cylinder

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டிற்கு கொண்டு வந்து விநியோகிப்பதற்கு முன்பே ஊழியர்கள் எரிவாயுவை திருடி எடுக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுத்தர மக்களின் மிகப்பெரிய சுமையாக இருப்பதில் சமையல் எரிவாயுவும் ஒன்று. பெரும்பாலும் பெண்கள் தனது வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் முக்கியமானதாக கருதுவதும் சமையல் எரிவாயு தான். நடுத்தர குடும்பத்து பெண்கள் ஒரு சிலிண்டரை சுமார் 45 நாட்களுக்கு கணக்கிட்டு அதை சிக்கனமாக பயன்படுத்துவதில் மிகுந்த பொறுப்புடன் செயல்படுவர். 

தற்போது, சிலிண்டர்களின் விலை அதிகமாகியுள்ளதால் அனைத்து குடும்பத்து பெண்களும் சமையல் எரிவாயுவை சிக்கனப்படுத்தி சேமிக்கின்றனர். இந்நிலையில், சமையல் எரிவாயுவை கொண்டு வரும் ஊழியர்கள் வரும் வழியிலேயே சமையல் எரிவாயுவை திருடும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது போன்ற செயலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது அந்நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது சேமிப்பு வீண்போகாமல் இருக்க சமையல் எரிவாயு நிறுவனங்கள் அக்கறை காட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close