அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்!

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 01:34 pm
makkal-needhi-maiam-case-filed-in-police-station-against-rajendra-balaji

கமலுக்கு எதிராக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி  திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். கமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்துக்கள் தீவிரவாதி என்று கூறிய கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து, அரசியலமைப்பிற்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி கிஷோர் குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close