கமல்ஹாசனை தமிழகத்தில் நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர்

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 01:32 pm
mannarkudi-jeeyar-press-meet-against-kamal-haasan

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்து விரோதத்தை பரப்புகிறார் கமல்ஹாசன் என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கமல் ஹாசனுக்கு, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திடம் இருந்து பணம் வருகிறது. அங்கு பணம் பெற்றுக்கொண்டு மக்களிடையே இந்துக்கள் மீதான விரோத கருத்துகளைப் பரப்பி வருகிறார். 

இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறும் கமலை, தமிழகத்தில் நடமாட விடமாட்டோம். இந்து விரோத நடிப்பை திரையுலகில் காட்டுவதற்கு பதிலாக அவர் பொது உலகில் காட்டுகிறார். 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்யக் கோரி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க உள்ளோம்" என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close