அனல் காற்றின் தாக்கம் குறைந்துள்ளது: வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 15 May, 2019 03:45 pm
the-impact-of-thermal-air-has-declined-weather-report

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பொழிவு காரணமாக அனல் காற்றின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவித்து இருந்த நிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பொழிவு காரணமாக அனல் காற்றின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. 

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் தருமபுரி மாவட்டம் பாலகோட்டில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், வெப்பநிலை 36 டிகிரி செல்சியசில் இருந்து  29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close