ஜூன் 6 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்!

  அனிதா   | Last Modified : 15 May, 2019 03:47 pm
application-for-medical-course-from-june-6th

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் மருத்துவப்படிப்பிற்கான  நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி  வெளியாக உள்ள நிலையில், ஜூன் 6ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும்  மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் MBBS படிப்பு மேற்கொள்ள உள்ள மாணவர்கள்  www.tn.health.org எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதே போல் 
www.tnmedicalselectiin.org என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 26 முதல் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close