ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 04:36 pm
tet-exam-dates-released

ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 28ம் தேதியே வெளியானது. மேலும் தேர்வுக்கு  விண்ணப்பிக்க மார்ச் இறுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர், இணையதள பிரச்சனை காரணமாக, விண்ணப்பிக்க ஏப்ரல் 12 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. 

இந்நிலையில் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ம் தேதி முதல் தாளும், ஜூன் 9ம் தேதி இரண்டாம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close