வரலாறு தெரியாமல் பேசி வரும் கமல் திருந்துவாரா என தெரியவில்லை: இல.கணேசன்

  முத்துமாரி   | Last Modified : 16 May, 2019 12:49 pm
ila-ganesan-press-meet

வரலாறு தெரியாமல் பேசி வரும் கமல் திருந்துவாரா என தெரியவில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என கமல் ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், "வரலாறு தெரியாமல் பேசி வரும் கமல் திருந்துவாரா என தெரியவில்லை. அவரக்குறிச்சியில் அதிக வாக்குகளை பெறுவதற்காக இதுபோன்று பேசிவருகிறார். 

இந்துவை பற்றி யார் தவறாக பேசினாலும், பிரதமர் உட்பட நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்துக்களை பற்றி சொல்ல வேண்டுமானால் நிறைய பேச வேண்டும். பெருவாரியான நல்ல குணங்கள் இந்துகளுக்கு இருக்கின்றன. மதச்சார்பற்றவன். அனைத்து மதத்தினரையும் ஆதரிக்க கூடியவர்கள். சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவர்கள். மற்ற மதத்தை இங்கு பரப்ப அனுமதி கொடுத்ததே இந்து தான். இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எனவே, கமல் ஹாசன் இந்துவை இழிவுபடுத்தி பேச வேண்டாம். அரவக்குறிச்சி மக்களுக்கும் மகாத்மா காந்தி கொலைக்கும் என்ன சம்மந்தம்? காந்தியின் கொலைக்கு நியாயம் கேட்க வந்துள்ளேன் என்று அரவக்குறிச்சியில் சென்று ஏன் சொல்ல வேண்டும். அவர் கேட்டதை பார்த்து அரவக்குறிச்சி மக்கள் பயப்பட மாட்டார்களா? கமலை நான் குழப்பவாதியாக தான் பார்க்கிறேன்" என்று பேசியுள்ளார். 

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close