ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

  முத்துமாரி   | Last Modified : 16 May, 2019 12:50 pm
madras-hc-interim-ban-for-taking-action-against-teachers-who-are-not-passed-in-qualifying-examination

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்த சுமார் 1500 ஆசிரியர்கள் பணியில் நீடித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பணிநீக்க நோட்டீஸ் அனுப்பும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த 4 ஆசிரியைகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கார்த்திகேயன் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், முன்னதாக தேர்வில் தோல்வியடைந்த 1500 ஆசிரியர்கள் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம், அதுவரை ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்கால தடை விதித்து நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close