ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் பி.எட் தேர்வு! - மாணவர்கள் குழப்பம்

  முத்துமாரி   | Last Modified : 16 May, 2019 02:09 pm
tet-and-b-ed-exam-are-in-same-date

ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட் தேர்வும் ஒரே நாளில் வருவதால் தேர்வு எழுதும் மாணாக்கர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

நடப்பு ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஜூன் 8ம் தேதி முதல் தாளும், ஜூன் 9ம் தேதி இரண்டாம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பி.எட் தேர்வும் ஜூன் 8ம் தேதி நடைபெற இருப்பதாக கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால் தேர்வு எழுதும் மாணாக்கர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

முன்னதாக, பி.எட் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close