அரவக்குறிச்சியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு!

  முத்துமாரி   | Last Modified : 16 May, 2019 03:38 pm
dmk-protest-at-aravakurichi-taluk-office

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நாளை வரவிருந்த நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அரவக்குறிச்சியில் மொத்தமுள்ள 12 இடங்களில், 4 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய ஸ்டாலினுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸின் ஜோதி மணி உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close