ஜூன் 8ல் நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்!

  முத்துமாரி   | Last Modified : 16 May, 2019 10:02 pm
b-ed-exam-date-changed

ஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ள பி.எட் தேர்வு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

நடப்பு ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஜூன் 8ம் தேதி முதல் தாளும், ஜூன் 9ம் தேதி இரண்டாம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பி.எட் தேர்வும் ஜூன் 8ம் தேதி நடைபெற இருப்பதாக கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால் தேர்வு எழுதும் மாணாக்கர்கள் குழப்பமடைந்தனர். பி.எட் தேர்வை மாற்றிவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட் தேர்வும் ஒரே நாளில் வரவிருப்பதையடுத்து, ஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ள பி.எட் தேர்வு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி நடக்கவிருந்த தேர்வு, ஜூன் 13ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பி.எட் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close